Posts

தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்த இவர்கள் தான் காரணம்… ‘பகீர்’ கிளப்பும் அண்ணாமலை!

Image
திமுக ஆட்சி வெறும் அலங்கார அறிவிப்பு ஆட்சி தான் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். எந்த ஆட்சியும் 60 மாதங்களுக்கான ஆட்சி தான் ; 5 ஆண்டு காலம் முடியும் போது அவர்களுக்கு வயது 5 தான் ; அப்போது 5 வயது குழந்தையிடம் வாக்குறுதி என்ன ஆச்சு என்று கேட்கிறீர்களே என்று முதலமைச்சர் கேட்பார் போல என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் எல்லாம் அறிவிப்புக் கோப்புகளாக இருக்கிறது என்று தான் அர்த்தம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியையும் திமுக அரசு எடுக்கவில்லை சிறுபான்மையினரால் தாலிக்கு தங்கம் திட்டத்தை... விரிவாக படிக்க >>

நடிகர் விஜய்க்கு அரசியல் ஆலோசகர் இவரா ? மதுரை ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு

நடிகர் விஜய்க்கு அரசியல் ஆலோசகர் இவரா ? மதுரை ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு விதவிதமாக போஸ்டர்கள் அடிப்பதில் மதுரை மக்களின் பாணியே தனி. குடும்ப நிகழ்வுகள் அரசியல், சினிமா என போஸ்டர் ஓட்டிய பிறகே நிகழ்ச்சிகள் களைகட்டும். குறிப்பாக சினிமா, அரசியல் சார்ந்த போஸ்டர்கள் எப்பொழுதும் பரபரப்பை ஏற்படுத்தும் இந்த நிலையில் 2026ல் முதல்வர் வேட்பாளர் என விஜய்யின் ரசிகர்கள் புகைப்படத்துடன் கூடிய ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், முடிவு எடுத்தால் முதல்வர் என்றும் 2021ல் தளபதி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், 2026ல் தளபதி என நடிகர் விஜய்யையும் குறிப்பிட்டுள்ளனர்.  இதில் உச்சமாக பிரஷாந்த் கிஷோரின் படத்துக்கு கீழ் அரசியல் ஆலோசகர் என குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருப்பதும், உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

மதுரையில் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்த போதே பரதக் கலைஞர் உயிர் இழந்த சம்பவம் பொதுமக்களை கலங்கச் செய்துள்ளது...!

Image
மதுரையில் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்த போதே பரதக் கலைஞர் உயிர் இழந்த சம்பவம் பொதுமக்களை கலங்கச் செய்துள்ளது...! மதுரையில் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்த போதே பரதக் கலைஞர் உயிர் இழந்துள்ள சம்பவம் பொதுமக்களை கலங்கச் செய்துள்ளது. மதுரை மாவட்டத்தின் அருகே உள்ள வண்டியூர் தெப்பக்குளத்தில் மாரியம்மன் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவின் பூச்சொரிதல் நாளில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்துள்ளது. நடன நிகழ்ச்சியில் பரதம், கரகாட்டம் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் பரதக் கலைஞர் காளிதாஸ் அவரது மகள் மற்றும் அவரது மாணவிகளுடன் நடனத்தில் பங்கேற்றுள்ளார். சிறிது நேரம் மாணவிகளுடன் நடனமாடிய காளிதாஸ், மேடையை விட்டு இறங்கி அருகில் இருந்த சேரில் நெஞ்சைப் பிடித்தவாறு அமர்ந்துள்ளார்.  மறுபுறம் காளிதாஸின் மகளும் இதர மாணவிகளும் தொடர்ந்து நடனம் ஆடி முடித்துள்ளனர். நடனம் ஆடி முடித்துவிட்டு கீழே வந்து பார்க்கையில் காளிதாஸ் உயிர் இழந்ததைத் தெரிந்து அவரது மகள் கதறி அழுதுள்ளார். மேலும் பரத மாணவிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்களும் கண்ணீர் சிந்தியது காண்போர் நெஞ்சையும் கலங்கச் செய்துள்ளது.

CSK அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி! ரசிகர்கள் அதிர்ச்சி

Image
CSK அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி! ரசிகர்கள் அதிர்ச்சி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நெட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக தோனி சென்னை அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துவிட்டதாக தெரியவந்துள்ளது. அதே சமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக தோனி தொடர்வார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

24-3-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
24-3-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

காசநோய் விழிப்புணர்வு

Image
காசநோய் விழிப்புணர்வு

ரேஷன் அட்டைக்கு 3 புதிய அறிவிப்புகள் அமைச்சர் அதிரடி | TN Ration Card Latest News | Ration shop news

Image
ரேஷன் அட்டைக்கு 3 புதிய அறிவிப்புகள் அமைச்சர் அதிரடி | TN Ration Card Latest News | Ration shop news