சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிய விக்ரம்!1759156799
சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிய விக்ரம்! கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகியப் படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கோப்ரா படத்தில் விக்ரம் 20 கெட்டப்புகளில் வருவதாக சொல்லப்படுகிறது. மறுபுறம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம். விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று மதியம் செய்திகள் வெளியாகின. இதனால் திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்து, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என இணையத்தில் பதிவிட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்த ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனை நிர்வாகம், “மார்பில் அசெளகரியம் ஏற்பட்டு நடிகர் விக்ரம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எங்கள் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு மாரடைப்பு இல்லை, அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று கூறியிருந்தது. இந்த நிலையில், உடல்நலம் குணம் அடைந்து நடிகர் விக்ரம் வீடு திரும்பியுள்ளார். இந்த தகவலையறிந்து அவரது ரசிகர்களும், ந...