Posts

Showing posts with the label #socialmedia

பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை முடக்கிய இலங்கை அரசு..!!

Image
பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை முடக்கிய இலங்கை அரசு..!! பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏறத்தாழ 2.25 கோடி மக்கள் வாழுகிற குட்டி நாடான இலங்கை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, சுற்றுலாத்துறை முடங்கியது. இதற்கிடையே அன்னியச்செலாவணி காலியானதால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. இலங்கை, அதன் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரும்பாலும் இறக்குமதியை நம்பி இருந்த நிலையில், அன்னியச்செலாவணியில்லாததால், இறக்குமதி பாதித்தது. உணவுப்பொருட்கள், இன்னபிற அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அவற்றின் விலை விண்ணோடும், முகிலோடும் போட்டி போட, சாமானிய மக்களின் வாழ்க்கை தள்ளாடத்தொடங்கியது. இதற்கு மத்தியில் தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட, அடி மேல் அடி விழ, இனியும் பொறுப்பதற்கு இல்லை என்கிற வகையில் மக்கள் பொங்கியெழுந்து தெருவில் இறங்கி போராடினார்கள். 31-ந்தேதி கொழும்பு நகரில் அதிபர் மாளிகை முன் ஆயிரக்கணக்கானோர் கூடி அதிபருக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வன்முறை கட்டவிழ