இந்தியாவில் ஒரேநாளில் 90% அதிகரித்த கரோனா பாதிப்பு! புதிதாக 2,183 பேருக்கு தொற்று! இந்தியாவில் ஒரேநாளில் கரோனா பாதிப்பு 90% அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,183 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்தியாவில் 2020 ஜனவரியில் கேரள மாநிலத்தில் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டார். தமிழகத்தில் மார்ச் 2020ல் கத்தாரில் இருந்து திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபருக்கு கரோனா உறுதியானது. அதன் பின்னர் இந்தியா மூன்று அலைகளைச் சந்தித்துவிட்டது. இதில் இரண்டாவது கரோனா அலையின் போது இந்தியாவில் உயிரிழப்புகள் அதிகமாக காணப்பட்டது. ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகிய சிக்கல்கள் எழுந்தன. ஆனால் 2021 ஜனவரி 16 ஆம் தேதியிலிருந்து இந்தியா கரோனா தடுப்பூசித் திட்டத்தை வேகப்படுத்தியது. இதனால், இப்போது வரை இந்தியாவில் 186 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூ...