டிசி (TC) வழங்கும் விவகாரம் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு342124568
டிசி (TC) வழங்கும் விவகாரம் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு TC ( மாற்றுச் சான்றிதழ் ) வழங்குவதில் தாமதமும், தடையும் கூடாது என்று அரசுப் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் இன்று (ஜூன் 13) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்புக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ள சூழலில், பள்ளிகள் திறந்தவுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றி அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இன்று பள்ளிகள் திறந்தவுடன், தொடக்கப்பள்ளிகளில் 5-ம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு தாமதமின்றி TC வழங்கிட வேண்டும் என்றும், இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து TC கோரினால், அவற்றை தடையின்றி வழங்கிட வேண்டும் என்றும் அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. TC வழங்கும் பணிகளை இன்றும், நாளை...