ரேஷன் கடைகள் நாளைக்கு இருக்கா, இல்லையா?
ரேஷன் கடைகள் நாளைக்கு இருக்கா, இல்லையா? குடும்ப அட்டைதாரர்கள்ரேஷன் பொருட்களை தங்கு தடையின்றி வாங்குவதற்கு வசதியாக மாதந்தோறும் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக முதல், இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் நிியாயவிலை கடை ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம், அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அதன் காரணமாக அந்த மாதத்துக்கான அத்தியாவசியப் பொருட்களின் விநியோககம் தாமதமாக தொடங்கியது. ஜனவரி மாதத்துக்கான பொருட்களை அந்த மாதம் முடிவதற்குள் அளிக்க வேண்டும் என்பதால், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் (ஜனவரி 30) ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு வர வேண்டியதானது. வார விடுமுறை நாளான ஜனவரி 30 ஆம் தேதி பணிபுரிந்த ரேஷன் பணியாளர்களுக்கு இதுநாள்வரை மாற்று விடுப்பு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அவர்களுக்கு மாற்று விடுப்பை கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி 30 ஆம் தேதிக்கு மாற்றாக, நாளை (மார்ச் 19) நியாய வில...