வெள்ளையாக பிறக்கும் குழந்தைக்கு மரண தண்டனை! ஜாரவா பழங்குடியினரின் விசித்திர பழக்கவழக்கங்கள்!890451189
வெள்ளையாக பிறக்கும் குழந்தைக்கு மரண தண்டனை! ஜாரவா பழங்குடியினரின் விசித்திர பழக்கவழக்கங்கள்! இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தெற்கு அந்தமான் மற்றும் நடு அந்தமானில் வசிப்பவர்கள்தான் ஜாரவா பழங்குடியினர். ஜாரவா எனும் சொல்லிற்கு “மண்ணின் மைந்தர்கள்” என்று பொருள். இவர்களின் மரபணு சோதனையில் இவர்கள் பசிபிக் தீவைச் சேர்ந்தவர்கள் என்றும், அந்தமான் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் இந்தியர்களின் மரபணு இவர்களின் உடலில் இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாரவா பழங்குடியின மக்கள் தங்கள் வித்தியாசமான வாழ்க்கை முறையால் உலக மக்களிடம் இருந்து விடுபட்டுள்ளனர். இங்கு வாழும் பெண்ணிற்கு வெள்ளை நிற குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை அவர்கள் கொன்று விடுவார்கள் என சொல்லப்படுகிறது. இன்றும் உலகின் பல பகுதிகளில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். சில பழங்குடியினர் காலப்போக்கில் நவீனத்தை ஏற்றுக்கொண்டனர், ஆனால் வெகு சிலரே கற்காலத்திய வாழ்க்கை முறையில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இது போல ஒரு பழங்குடி இனமாக கருதப்படும், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வாழும் ஜாரவா பழங்குடியினரைப் ...