கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை! துருக்கி & சிரியாவில் மக்களின் நிலை திண்டாட்டம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8500 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புகள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில் தற்போதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டிருந்தாலும், துருக்கியில் நிலவும் கடும் பனிப்பொழிவு மீட்புப்பணிகளுக்குத் தடையாக உள்ளது. இதனால், உயிர்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. சிரியாவில் ஏற்கனவே நிலைமை மோசமாக இருந்தது. உறைய வைக்கும் குளிர், காலரா தொற்று நோய், மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கபப்ட்டிருந்த சிரியாஅகதிகளின் நிலைமை நிலநடுக்கத்திற்கு பிறகு பரிதாபமானதாக மாறிவிட்டது. தற்போது, நிலநடுக்கம் ஏற்பட்ட வடக்கு சிரியாவின் பகுதிகளில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அகதிகளுக்கு மிக அதிகமான பாதிப்பு ஏற்...