Posts

Showing posts with the label #Political | #Advisor | #Vijay

நடிகர் விஜய்க்கு அரசியல் ஆலோசகர் இவரா ? மதுரை ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு

நடிகர் விஜய்க்கு அரசியல் ஆலோசகர் இவரா ? மதுரை ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு விதவிதமாக போஸ்டர்கள் அடிப்பதில் மதுரை மக்களின் பாணியே தனி. குடும்ப நிகழ்வுகள் அரசியல், சினிமா என போஸ்டர் ஓட்டிய பிறகே நிகழ்ச்சிகள் களைகட்டும். குறிப்பாக சினிமா, அரசியல் சார்ந்த போஸ்டர்கள் எப்பொழுதும் பரபரப்பை ஏற்படுத்தும் இந்த நிலையில் 2026ல் முதல்வர் வேட்பாளர் என விஜய்யின் ரசிகர்கள் புகைப்படத்துடன் கூடிய ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், முடிவு எடுத்தால் முதல்வர் என்றும் 2021ல் தளபதி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், 2026ல் தளபதி என நடிகர் விஜய்யையும் குறிப்பிட்டுள்ளனர்.  இதில் உச்சமாக பிரஷாந்த் கிஷோரின் படத்துக்கு கீழ் அரசியல் ஆலோசகர் என குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருப்பதும், உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.