வெள்ளையாக பிறக்கும் குழந்தைக்கு மரண தண்டனை! ஜாரவா பழங்குடியினரின் விசித்திர பழக்கவழக்கங்கள்!890451189


வெள்ளையாக பிறக்கும் குழந்தைக்கு மரண தண்டனை! ஜாரவா பழங்குடியினரின் விசித்திர பழக்கவழக்கங்கள்!


இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தெற்கு அந்தமான் மற்றும் நடு அந்தமானில் வசிப்பவர்கள்தான் ஜாரவா பழங்குடியினர். ஜாரவா எனும் சொல்லிற்கு “மண்ணின் மைந்தர்கள்” என்று பொருள். இவர்களின் மரபணு சோதனையில் இவர்கள் பசிபிக் தீவைச் சேர்ந்தவர்கள் என்றும், அந்தமான் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் இந்தியர்களின் மரபணு இவர்களின் உடலில் இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜாரவா பழங்குடியின மக்கள் தங்கள் வித்தியாசமான வாழ்க்கை முறையால் உலக மக்களிடம் இருந்து விடுபட்டுள்ளனர். இங்கு வாழும் பெண்ணிற்கு வெள்ளை நிற குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை அவர்கள் கொன்று விடுவார்கள் என சொல்லப்படுகிறது.

இன்றும் உலகின் பல பகுதிகளில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். சில பழங்குடியினர் காலப்போக்கில் நவீனத்தை ஏற்றுக்கொண்டனர், ஆனால் வெகு சிலரே கற்காலத்திய வாழ்க்கை முறையில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இது போல ஒரு பழங்குடி இனமாக கருதப்படும், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வாழும் ஜாரவா பழங்குடியினரைப் பற்றி தான் நாம் இன்று தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த பழங்குடியினர் கடந்த 55 ஆயிரம் ஆண்டுகளாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் வாழ்ந்து வரும் பழங்குடியினராகக் கருதப்படுகிறார்கள். இப்போது ஜாரவா பழங்குடியினமானது அழிவின் விளிம்பை எட்டியுள்ளது என்றே கூறலாம். இவர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று கூறப்பட்டாலும், அவர்கள் நீண்ட காலமாக இந்தியப் பெருங்கடல் தீவில் தான் வசித்து வருகின்றனர்.

 

தொன்மையான பழங்குடிகளாக கருதப்படும் ஜாரவா பழங்குடியினத்தில் இப்போது மொத்தமாகவே வெறும் 380 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். வெளி உலக தொடர்பு துளியும் இன்றி தனிமையில் வாழும் ஜாரவா பழங்குடியினர் விலங்குகளையும் அந்தமான் கடலில் மீன்களையும் வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர். மீன்கள் மற்றும் நண்டுகளை வில் - அம்புகளால் வேட்டையாடி பசியாறுகின்றனர். மேலும் பன்றிகளை வேட்டையாடி உண்கின்றனர். ஆனால் இந்த பழங்குடியினரில் பல விசித்திரமான விஷயங்கள் மிகவும் பரவலாக உள்ளன. பிறக்கும் குழந்தைக்கு கூட மரண தண்டனை விதிப்பதுதான் இதில் அதிர்ச்சிகரமானது.

குழந்தை நிறமாக இருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது:

ஜாரவா பழங்குடியினரில், ஒரு குழந்தை அழகாகவோ அல்லது வெள்ளை நிறமாகவோ பிறந்தால் அந்த குழந்தைகள் பிறந்த உடனேயே கொல்லப்படுவார்கள் என்பது அதிர்ச்சி ரகம். இந்த பழங்குடி மக்கள் கருமையான தோல் கொண்டவர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்பதால் மக்கள் கறுப்பாக இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஒரு பெண்ணுக்கு வெள்ளையாக குழந்தை பிறந்தால், இந்த பழங்குடியினர் அந்த குழந்தையை ஏற்காமல் கொன்றுவிடுகிறார்கள். அவர்களை பொறுத்தவரை, வெள்ளை நிறமான குழந்தை என்பது வேறு சில பழங்குடி அல்லது வேற்றுமையாக கருதுகிறார்கள். இதனால் தான் வெண்மை நிறத்திலான குழந்தையை கொன்று விடுகிறார்கள். இது தவிர, இந்தச் சமூகத்தில் ஒரு குழந்தை பிறக்கும் போதெல்லாம், குலப் பெண்கள் அனைவரும் தாய்ப்பால் கொடுப்பார்கள். இது ஒற்றுமையின் ஆணிவேராகக் கருதப்படுகிறது.

 

ஒரு கருப்பு குழந்தை முக்கியம்:

ஜாரவா பழங்குடியினரில் குழந்தை கருப்பாக இருப்பது மிகவும் முக்கியம். இதற்காக, கர்ப்பிணிப் பெண்ணுக்கு விலங்குகளின் ரத்தம் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண், விலங்குகளின் ரத்தத்தைக் குடித்தால், பிறக்கும் குழந்தையின் நிறம் கருப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஒரு நிறமான குழந்தை பிறந்த பிறகு, அவரது தந்தையே அக்குழந்தையை கொன்றுவிடுகிறார் என்பது மூடநம்பிக்கையின் உச்சமாக உள்ளது. இது தவிர, எப்போது ஒரு பெண் கணவனை இழக்கிறாரோ, அப்போதே அவருடைய குழந்தை கொல்லப்படுகிறது.

Comments

Popular posts from this blog