Popular posts from this blog
ஐபிஎல் 2022: கொல்கத்தாவை பந்தாடியது லக்னோ!
ஐபிஎல் தொடரின் 53ஆவது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை லக்னெள அணி குவித்தது. அதிகபட்சமாக டி காக் 50 ரன்கள், தீபக் ஹூடா 41 ரன்கள் எடுத்தனர்.
கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கும் சுரேஷ் ரெய்னா; ரசிகர்கள் உற்சாகம்! தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 15ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. லக்னோ அணியின் அவேஷ் கான், ஜேசன் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் மீண்டும் புள்ளிப்பட்டியலின் முதலாவது இடத்திற்கு லக்னோ முன்னேறியது. விரிவாக படிக்க >>
முதல்முறையாக ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை... கூடுதல் சிறப்பாக எல்லாருமே நடிகர்கள்!
முதல்முறையாக ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை... கூடுதல் சிறப்பாக எல்லாருமே நடிகர்கள்! ஆஸ்கர் விருதுகள் 2022 விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்புடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்தினர். முதல்முறையாக 3 பெண்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லாமல் காணப்பட்டது. தன்னுயை மனைவியை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு வில் ஸ்மித் மேடைக்கு சென்று அறைவிட்ட நிகழ்வும் நடைபெற்றது. இதனால் லைவ் நிகழ்ச்சி சிலநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. உக்ரைனில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த வேண்டி சில நொடிகள் அரங்கமே மௌனமாக இருந்தது. மேலும் உக்ரைனின் கொடியை சார்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அந்த வண்ணத்தில் அடையாளமாக சிலவற்றை அணிந்து வந்த நிகழ்வும் நடைபெற்றது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகர், நடிகை, துணைநடிகர் மற்றும் துணை நடிகை ஆகிய பிரிவுகளில் வில் ஸ்மித், ஜெசிகா சாஸ்டைன், ட்ராய் க்ராட்சூர் மற்றும் ஆரியானா டீபோஸ் ஆகி...
Comments
Post a Comment