Monkeypox Virus: கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் அடுத்த வைரல், எச்சரிக்கை விடுத்த ICMR


Monkeypox Virus: கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் அடுத்த வைரல், எச்சரிக்கை விடுத்த ICMR


குரங்கு அம்மை எச்சரிக்கை: கொரோனா வைரஸுக்குப் பிறகு, இப்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மையின் அச்சுறுத்தல் உருவாகி வருகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO), குரங்கு அம்மை 21 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

குரங்கு அம்மை குறித்து தற்போது இந்தியாவிலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

சிறு குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர்
இளம் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐசிஎம்ஆர் கூறுகிறது. இதன் காரணமாக அதன் அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும். தற்போது, ​​இந்தியாவில் குரங்கு அம்மை காய்ச்சலால் யாரும் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்படவில்லை. 

எனினும், இந்த தொற்று குறித்து அரசாங்கம் தீவிர எச்சரிக்கையுடன் உள்ளது. இதுவரை 21 நாடுகளில் 226 பேருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பொதுவாகக் கண்டறியப்படாத நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 100 சந்தேகத்திற்கிடமான நோயாளிகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை கூறியது.

மேலும் படிக்க | குரங்கு அம்மை: அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பூசி பற்றிய முழு விவரங்கள் இதோ 

அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
குரங்கு அம்மை காய்ச்சலைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்று வந்து, இந்த நோயின் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளைக் கண்காணிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

அத்தகைய நோயாளிகளை தனிமைப்படுத்தலில் வைக்குமாறு சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. கனடாவுக்குச் சென்று வந்த ஒருவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் இருந்ததால், அவர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.

பல நாடுகளில் தொற்று இருப்பது தெரிய வருகிறது

புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் இந்த நோயாளியின் மாதிரி பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படவில்லை. பயணி எந்த விமான நிலையத்தில் வந்திறங்கினார் என்பது வெளியிடப்படவில்லை. 

மே 7 அன்று பிரிட்டனில் குரங்கு அம்மையின் முதல் நோயாளி பற்றிய தரவு பதிவானது. பிரிட்டன், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பதிவாகியுள்ளது. 

குரங்கு அம்மை: அறிகுறிகள் என்ன?

குரங்கு அம்மையின் ஆரம்ப அறிகுறிகள் பின்வருமாறு:

- காய்ச்சல்

- தலைவலி,

- தசைவலி

- முதுகுவலி

- சுரப்பிகளில் வீக்கம்

- குளிர் மற்றும் சோர்வு 

நோயின் முதல் அறிகுறிகளை அனுபவித்த சில நாட்களுக்குப் பிறகு, தட்டம்மையில் ஏற்படுவது போன்ற சொறி போன்ற அறிகுறிகள் பொதுவாக தோன்றும். முகத்தில் தொடங்கி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இது பரவுகிறது. சொறி இறுதியில் சிரங்குகளை உருவாக்குகிறது. இந்த சிரங்குகள் பின்னர் விழுந்துவிடும்.

குரங்கு அம்மை எப்படி வருகிறது? இதன் பரவல் திறன் என்ன? 

குரங்கு அம்மை மக்களிடையே எளிதில் பரவாது. மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் பெரும்பாலானோருக்கு பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதால் தொற்று பரவுகிறது. ஒரு நபருக்கு சொறி இருந்தால் மட்டுமே அவர் இந்த தொற்றை பரப்ப முடியும் என நம்பப்படுகின்றது. ஆனால், அது தவறான கருத்து. ஆடை, படுக்கை அல்லது துண்டுகள், தோல், குரங்கு அம்மை சொறி இருக்கும் நபரின் இருமல் அல்லது தும்மல் போன்றவற்றின் மூலமும் இது ஒரு நபரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. 

மேலும் படிக்க | Monkeypox Alert: தொண்டை மற்றும் ரத்தத்தில் 10 வாரங்கள் வரை நீடிக்கும்: அசாதாரண அறிகுறிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Comments

Popular posts from this blog

DIY Tree Ring Planter Ideas to Beautify Your Outdoor

How To Make a DIY Modern Wooden Christmas Tree Set