டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு!


டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு!


ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா அணியுடன் டெல்லி அணியும் , லக்னோ அணியுடன் ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இன்று பிற்பகல் நடக்கும் முதல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் ரிஷாப் பந்த் தலைமையிலான டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் உள்ளனர் .

அதிகமான நட்சத்திர வீரர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள கொல்கத்தா அணியை பொறுத்தவரை ஒரு சில வீரர்கள் நிலைத்து விட்டால் போதும். அவர்களின் கம்பீர கோட்டையை தகர்ப்பது கடினம். கடந்த சில ஆணடுகள் டெல்லி அணிக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் இப்போது அதே அணியை எதிர்க்க இருப்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்தப்பக்கம் தனது பழைய கூட்டாளியான ஷ்ரேயஸ் ஐயரை எதிர்த்து டெல்லியின் இளம்படை மோத உள்ளது . வெற்றியுடன் (மும்பைக்கு எதிராக) இந்த சீசனை தொடங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அதன் பிறகு குஜராத், லக்னோவுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இன்று நடக்கும் இந்த முதல் போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

DIY Tree Ring Planter Ideas to Beautify Your Outdoor

Gingerbread Lasagna

How To Make a DIY Modern Wooden Christmas Tree Set