விலைவாசி உயர்வு! தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்தஉற்பத்தியாளர்கள் முடிவு 


விலைவாசி உயர்வு! தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்தஉற்பத்தியாளர்கள் முடிவு 


கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை வாட்டிவதைத்து வரும் விலைவாசி உயர்வுதீப்பெட்டி தொழிலையும் விட்டுவைக்க வில்லை. இதனை உற்பத்தி செய்வதற்குதேவையான மூலப்பொருட்களான பாஸ்பரஸ், மெழுகு, குளோரைடு, அட்டை, பேப்பர் போன்றவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதனை தாக்குபிடிக்க முடியாமல் ரூ.1-க்கு விற்கப்பட்டு வந்த தீப்பெட்டியின்விலை 14 ஆண்டுகளுக்கு பின் ரூ.2 ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும் கடந்த 3 மாதங்களில் தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை 30 முதல் 40% வரை அதிகரித்து இருப்பதால் தீப்பெட்டி விலையை உயர்த்தியும் பலன்கிடைக்கவில்லை. எனவே 600 தீப்பெட்டிகளை கொண்ட பண்டலின் விலையைரூ.300-ல் இருந்து ரூ.350 ஆக உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தீப்பெட்டி விலையை உயர்த்துவதன் மூலம் மட்டும் தங்கள் பிரச்சனைக்கு தீர்வுகிடைக்காது என்பதை உணர்ந்த உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களின்விலையை குறைக்க அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்காரணமாகவே வரும் ஏப்ரல் 6 ஆம் தேதியிலிருந்து 17 ஆம் தேதி வரைதமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துஉள்ளனர்.

Comments

Popular posts from this blog

DIY Tree Ring Planter Ideas to Beautify Your Outdoor

Gingerbread Lasagna

How To Make a DIY Modern Wooden Christmas Tree Set