ஏப்.4ம் தேதி முதல் மதுரை எய்ம்ஸில் வகுப்புகள் துவக்கம்

மதுரை: மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் இயங்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. மேலும் இங்கு எம்பிபிஎஸ் படிப்பதற்கான 50 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றது. தற்போது ஏப்.4ம் தேதி முதல் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகள் துவங்கும் என்று அதன் இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும், வகுப்பிற்கு வரும் மாணவர்கள் பார்மல் உடை அணிந்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Classes start on April 4 at Madurai AIIMSவிரிவாக படிக்க >>

Comments
Post a Comment