விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழப்பு!


விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழப்பு!


 சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழப்பு - சீன அரசு அறிவிப்பு

சீனாவின் விமான நிறுவனங்களில் ஒன்றான 'சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் கடந்த 21-ந்தேதி அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சு நோக்கி புறப்பட்டது. 

 

அந்த விமானத்தில் 123 பயணிகள் 9 பணியாளர்கள் என மொத்தம் 132 பேர் பயணித்தனர். விமானம் அந்நாட்டின் ஷூவாங் மாகாணம் டென்ஜியான் கவுண்டிக்கு உட்பட்ட வுசோ என்ற நகரின் அருகே உள்ள மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்திய நேரப்படி மாலை 3 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

 

விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானம் மலையில் மோதி விழுந்தவுடன் அதில் மளமளவென தீப்பற்றி எரிந்தது. அந்த மலைப்பகுதி முழுவதும் புகைமூட்டமானது.

 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், ராணுவம், போலீசார் என பல்வேறு பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

 

இந்த நிலையில், மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துவிட்டதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்த 120 பேரின் டி.என்.ஏ. அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது

Comments

Popular posts from this blog